Friday 4 January 2013

இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்


புதுவருடத்தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்

பெருகிவரும் கணினி பாவனைக்கு ஈடாக வைரஸ் தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
இப்படியான வைரஸ் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் காணப்படுகின்றபோதும் அவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைப்பதில்லை.
ஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றான Bitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.

Saturday 8 December 2012

http://www.iwesoft.com/product/30/google-books-downloader


கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்

மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். இதனை இலவசமாக பெற முடியாத என்றால், ஏன் முடியாது, முடியும். அதற்கு ஒரு இலவச Google Books Downloader மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக கூகுள் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த Google BooksDownloader மென்பொருளை ஒப்பன் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டிய புத்தகத்தின் முகவரியை குறிப்பிட்டு, குறிப்பிட்ட புத்தகமானது எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பின் Download Book as PDF, Download Book as Image என்ற பொத்தான்களை அழுத்தி கூகுள் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின் சிலமணி நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட புத்தகமானது, நீங்கள் குறிப்பிட்ட பைல் பார்மெட்டில், குறிப்பிட்ட இடத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும்

Wednesday 21 November 2012

கூகுள் குரோமிலேயே நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு [ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 04:16.15 மு.ப GMT ] கூகுள் குரோமின் புத்தம் புதிய நீட்சி மூலம் சூரியக்குடும்பத்திற்கு அப்பால் உள்ள 100,000 நட்சத்திரங்களை பார்வையிடலாம். Chrome experiment மூலம் இணைய உலாவியில் ஏராளமான புதிய அனுபவங்களை கொடுத்துள்ள கூகுள், தற்போது விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை பார்வையிடும் வசதியையும் தொடங்கி உள்ளது. இதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். பின் ஓபன் ஆகும் விண்டோவில், 3டி தொழில்நுட்பத்தில் Milky Wayக்குச் சென்று ஒவ்வொரு நட்சத்திர குடும்பத்தையும், அது சூரியனிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதையும் காணலாம். விஞ்ஞானம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையதள முகவரி

கூகுள் குரோமிலேயே நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு
[ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 04:16.15 மு.ப GMT ]
கூகுள் குரோமின் புத்தம் புதிய நீட்சி மூலம் சூரியக்குடும்பத்திற்கு அப்பால் உள்ள 100,000 நட்சத்திரங்களை பார்வையிடலாம்.
Chrome experiment மூலம் இணைய உலாவியில் ஏராளமான புதிய அனுபவங்களை கொடுத்துள்ள கூகுள், தற்போது விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை பார்வையிடும் வசதியையும் தொடங்கி உள்ளது.
இதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில், 3டி தொழில்நுட்பத்தில் Milky Wayக்குச் சென்று ஒவ்வொரு நட்சத்திர குடும்பத்தையும், அது சூரியனிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதையும் காணலாம்.
விஞ்ஞானம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Monday 29 October 2012

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, 03:05.02 மு.ப GMT ]
தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும்.
எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
இச்செயன்முறைக்கு PDF to Text Converter எனும் மென்பொருளானது பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருள் மூலம் தனிப்பட்ட ஒரு கோப்பினையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களினையோ மிகவும் இலகுவான முறையில் ஒரே நேரத்தில் Text கோப்பாக மாற்றியமைக்க முடியும்.
அத்துடன் ஒரு கோப்பின் குறிப்பிட்ட சில பக்கங்களையோ அல்லது அனைத்து பக்கங்களையுமோ Text மாற்றியமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருளின் செயற்பாட்டிற்கு Adobe Acrobat Reader மென்பொருளோ அல்லது எந்தவிதமான Print Driver மென்பொருட்களோ கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஓடியோ கோப்புகளின் பல்வேறு வகைகள் [ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:22.16 பி.ப GMT ] இசையை ரசிப்பதிலும், அவற்றை பங்கிட்டுக் கொள்வதிலும், மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஓடியோ கோப்புகள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக MP3 கோப்புகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. .mp3: இது MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய கோப்புகளாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான File Format இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும், பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது WinAmp Player, Windows Media Player ஆகும். .wav: MP3 போல இதுவும் பிரபலமான ஒன்றாகும். டிஜிட்டல் ஓடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய கோப்பாக உருவாகும். .aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது. வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஓடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஓடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் கோப்பின் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். .ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு Codec என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். .wma: Windows Media Audio File என்பதன் சுருக்கம். இந்த வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை கோப்புகளும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். Windows Media Player-ல் இதனை இயக்கி ரசிக்கலாம்.

ஓடியோ கோப்புகளின் பல்வேறு வகைகள்
[ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:22.16 பி.ப GMT ]
இசையை ரசிப்பதிலும், அவற்றை பங்கிட்டுக் கொள்வதிலும், மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஓடியோ கோப்புகள் நமக்கு உதவுகின்றன.
எடுத்துக்காட்டாக MP3 கோப்புகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
.mp3: இது MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய கோப்புகளாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான File Format இதுவாகும்.
இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும், பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது WinAmp Player, Windows Media Player ஆகும்.
.wav:  MP3 போல இதுவும் பிரபலமான ஒன்றாகும். டிஜிட்டல் ஓடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய கோப்பாக உருவாகும்.
.aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது. வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஓடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஓடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் கோப்பின் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும்.
.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள்.
ஆனால் அதற்கு Codec என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
.wma: Windows Media Audio File என்பதன் சுருக்கம். இந்த வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை கோப்புகளும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். Windows Media Player-ல் இதனை இயக்கி ரசிக்கலாம்.