Monday 29 October 2012

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, 03:05.02 மு.ப GMT ]
தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும்.
எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
இச்செயன்முறைக்கு PDF to Text Converter எனும் மென்பொருளானது பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருள் மூலம் தனிப்பட்ட ஒரு கோப்பினையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களினையோ மிகவும் இலகுவான முறையில் ஒரே நேரத்தில் Text கோப்பாக மாற்றியமைக்க முடியும்.
அத்துடன் ஒரு கோப்பின் குறிப்பிட்ட சில பக்கங்களையோ அல்லது அனைத்து பக்கங்களையுமோ Text மாற்றியமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருளின் செயற்பாட்டிற்கு Adobe Acrobat Reader மென்பொருளோ அல்லது எந்தவிதமான Print Driver மென்பொருட்களோ கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஓடியோ கோப்புகளின் பல்வேறு வகைகள் [ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:22.16 பி.ப GMT ] இசையை ரசிப்பதிலும், அவற்றை பங்கிட்டுக் கொள்வதிலும், மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஓடியோ கோப்புகள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக MP3 கோப்புகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. .mp3: இது MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய கோப்புகளாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான File Format இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும், பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது WinAmp Player, Windows Media Player ஆகும். .wav: MP3 போல இதுவும் பிரபலமான ஒன்றாகும். டிஜிட்டல் ஓடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய கோப்பாக உருவாகும். .aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது. வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஓடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஓடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் கோப்பின் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். .ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு Codec என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். .wma: Windows Media Audio File என்பதன் சுருக்கம். இந்த வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை கோப்புகளும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். Windows Media Player-ல் இதனை இயக்கி ரசிக்கலாம்.

ஓடியோ கோப்புகளின் பல்வேறு வகைகள்
[ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:22.16 பி.ப GMT ]
இசையை ரசிப்பதிலும், அவற்றை பங்கிட்டுக் கொள்வதிலும், மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஓடியோ கோப்புகள் நமக்கு உதவுகின்றன.
எடுத்துக்காட்டாக MP3 கோப்புகள் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
.mp3: இது MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய கோப்புகளாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான File Format இதுவாகும்.
இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும், பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது WinAmp Player, Windows Media Player ஆகும்.
.wav:  MP3 போல இதுவும் பிரபலமான ஒன்றாகும். டிஜிட்டல் ஓடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய கோப்பாக உருவாகும்.
.aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது. வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஓடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஓடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் கோப்பின் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும்.
.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள்.
ஆனால் அதற்கு Codec என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
.wma: Windows Media Audio File என்பதன் சுருக்கம். இந்த வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை கோப்புகளும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். Windows Media Player-ல் இதனை இயக்கி ரசிக்கலாம்.