Monday 29 October 2012

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, 03:05.02 மு.ப GMT ]
தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும்.
எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
இச்செயன்முறைக்கு PDF to Text Converter எனும் மென்பொருளானது பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருள் மூலம் தனிப்பட்ட ஒரு கோப்பினையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களினையோ மிகவும் இலகுவான முறையில் ஒரே நேரத்தில் Text கோப்பாக மாற்றியமைக்க முடியும்.
அத்துடன் ஒரு கோப்பின் குறிப்பிட்ட சில பக்கங்களையோ அல்லது அனைத்து பக்கங்களையுமோ Text மாற்றியமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருளின் செயற்பாட்டிற்கு Adobe Acrobat Reader மென்பொருளோ அல்லது எந்தவிதமான Print Driver மென்பொருட்களோ கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

No comments:

Post a Comment